வாங்கித் தாங்க வானதி… மடக்கிய முதல்வர்

Published On:

| By Aara

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 28) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய  பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், M MK Stalin reply to Vanathi srinivasan

கோவை குண்டுவெடிப்பு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு பற்றியெல்லாம் குறிப்பிட்டு தமிழ்நாடு காஷ்மீர் ஆகிவிடக் கூடாது என்றும் பேசினார்.

இதற்கு காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக எழுந்து பதிலளித்தார். அப்போது,

“வானதி சீனிவாசன் பேசும்போது ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி குறிப்பிட்டார். அந்த கொலை அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது.  அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

காஷ்மீர் மாதிரி நடக்கக் கூடாது என்றும்  இங்கே பேசியிருக்கிறார். அதுபோல தமிழ்நாட்டில் நிச்சயமாக இதுவரை நடைபெறவில்லை, நடைபெறாது என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் சம்பவம் பற்றி கூட  நாங்கள் பேசுகிறபோது ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி நாங்கள் இதுவரை பேசவில்லை. அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நான் தெளிவாகவே தெரிவித்த செய்தி என்னவென்று கேட்டீங்கன்னா, ‘காஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரையிலே நீங்கள் எடுக்கும் எந்த  நடவடிக்கையாக இருந்தாலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்’ என்றுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  மதவாதம் நுழைய முடியாது முடியாது முடியாது. CM MK Stalin reply to Vanathi srinivasan

நீங்கள் குறிப்பிட்ட  கோவை சம்பவம் பற்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? ஆனால் அதே நேரத்தில்  உங்களுடைய பிஜேபி ஆட்சி செய்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். பிரதமர் கூட அங்கே சென்று பார்க்கவில்லை.

தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் பேசினார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேநேரம் இந்த ஆட்சிக்கு ஒன்றிய அரசின் நிதி வராமல் இருப்பது பற்றியும் அவருக்குத் தெரியும்,  அந்த நிதியை வழங்கினால் தமிழ்நாடு இன்னும் முன்னேறும். தயவு செய்து உங்கள் தலைமையிடம் சொல்லி அந்த நிதியை கொடுங்கள் என குரல் கொடுக்குமாறு இந்த மன்றத்தின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சரே சொல்கிறார். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறோம், இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.  இதை எதிர்த்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் உறுப்பினருக்கு தெரியாதா?” என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். CM MK Stalin reply to Vanathi srinivasan

அப்போது சபாநாயகர் அப்பாவு,  “ஒன்றிய நிதியமைச்சர் அவங்களுக்கு வேண்டியவங்கதான். வாங்கித் தருவாங்கனு நம்புறேன்” என்று இந்த விவாதத்தை முடித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share