முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்த நாள்.. மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Mathi

CM MK Stalin Birth Day

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறுமலர் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்வைப் பகிர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, துணை முதல்வர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி,
அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில், “நல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
இந்திய கூட்டாட்சி தத்துவம் – மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

ADVERTISEMENT

ஸ்டாலின் தலைமையில், 2026-ல் மீண்டும் Dravidian Model ஆட்சி அமைய அயராது உழைப்போம்!

கனிமொழி எம்.பி: சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும்முதலமைச்சர் – தலைவர் அண்ணன் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன்

அமைச்சர் கே.என்.நேரு: இந்திய ஒன்றியத்தின் ஈடு இணையில்லா தலைவர் – தென்னகத்தின் உரிமைக் குரலாய் ஓயாமல் ஒலிக்கும் “என் குடும்பத் தலைவர்” முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்…!

சமூக நீதி – மக்களாட்சி – மாநில உரிமை – சுயமரியாதை – பகுத்தறிவு என நாட்டிற்கே பாடம் எடுத்து; பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான ஆட்சியை நடத்தி; தன் கையெழுத்தால் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றி தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் தலைவரை போற்றுகிறோம்…!

பெரியாரின் கொள்கையும் – அண்ணாவின் கனவும் – கலைஞரின் துணிவும் ஒன்றாக கலந்த நம் ஒப்பற்ற தலைவரின் வழியில், தமிழ்நாடு காக்க, தளராமல் உழைப்போம்..!

தமிழ்நாட்டை நாசம் செய்ய துடிக்கும் கூட்டத்திடமிருந்து நம்மை பாதுகாக்கும் தலைவர் அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று பிறந்தநாள் பரிசாக ஒப்படைப்போம்..!

தலைவர் தலைமையில் Dravidian Model 2 point O ஆட்சி அமைக்க சூளுரைப்போம்..!

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி: இன்று பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினுக்கு எமது மனமுவந்த இனிய வாழ்த்துகள். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காகவும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலன்களுக்காகவும் அரசியல் களத்தில் அயராது பாடாற்றி வருகிற ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்’ தலைவர் மற்றும் ‘இந்தியா கூட்டணியின்’ முன்னணி தலைவர் என்கிற முறையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எமது வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி: ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்! புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை மகளிர் உரிமைத் தொகை – பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள். இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் ஸ்டாலின். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி: நேர்மையும், நெஞ்சுறுதியும், ஓய்வறியாத உழைப்பும் இருந்தால் உலகம் வணங்கிட உயர்வடையலாம் என நமக்கு வாழ்க்கை பாடம் கற்றுத் தந்த கழகத் தலைவர்.. மக்களின் கனவுகளை நலத்திட்டங்களாக நிறைவேற்றும் சரித்திர நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் நம்மையாண்டு நலமுடன் வாழ வேண்டும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share