இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள OXFORD பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜெர்மன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், லண்டன் OXFORD பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். அங்கு, தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, ” தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை. சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவங்களை எடுத்துரைத்தவர் தந்தை பெரியார். உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சுயமரியாதை கருத்தியலைப் பரப்பியவர் தந்தை பெரியார். தமிழகத்தில் திமுகவின் திராவிட மாடல் அரசு, தந்தை பெரியார் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் அளவுக்கு முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.