தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 1) 73-வது பிறந்த நாள். இதனையொட்டி திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைப் பெறுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்த நாளை தமது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சிஐடி நகர் இல்லங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து தொண்டர்களிடம் பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளனர்.
