ADVERTISEMENT

கோவையின் புதிய அடையாளம் – 10.10 கி.மீட்டர் நீள பாலம் திறப்பு – முதல்வருக்கு நன்றி சொன்ன ஜி.டி.நாயுடு மகன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை மக்களின் நீண்டகால கனவான ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை ஜிடி நாயுடுவின் மகனுடன் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோவை அவினாசி சாலையின் உப்பிலிபாளையம் முதல் கோல்டு விங்ஸ் வரை 10.10 கி.மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட பாலம் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலத்திற்கு கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜி.டி நாயுடுவின் மகனுடன் இணைந்து முதல்வர் பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அப்பா பெயர் வைத்து பாலம் திறந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. அப்பா பெயர்தான் வைக்கப்போகிறார் என்று எங்களுக்கே தெரியாது. பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். அவ்வளவு மகிழ்ச்சி. முதலமைச்சருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

ADVERTISEMENT

கோவை மாநகரத்திற்கு இந்த பாலத்தால் ஆயிரம் வருடங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலே, கோவையில்தான் விமான நிலையத்தை 15 நிமிடங்களில் சென்றடைய முடியும். பெங்களூர், சென்னை , பாம்பே வில் விமானநிலையத்தில் எளிதில் சென்றடைய முடியாது. இந்த பாலம் கோவையின் பெருமை . நேரம் குறைவாவதோடு தொழில் முனைவோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோவையின் வளர்ச்சி அபாரமானதாக இருப்பதாக தெரிவித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share