சென்னையை அடுத்த மணலியில் நேற்று (ஆகஸ்ட் 30) இரவு 1 மணிநேரத்தில் 27 செ.மீ மழை கொட்டியதற்கு மேகவெடிப்புதான் காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த மணலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 10 மணி முதல் 11 வரையில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 1 மணிநேரத்தில் 27 செ.மீ. மழை பதிவானது.
- மணலி 27.15 செ.மீ
- மணலி நியூ டவுன் 25.56 செ.மீ
- மணலி விம்கோ நகர் 22.86 செ.மீ
- கொரட்டூர் 18.24 செ.மீ
- திருவள்ளூர் 15.88செ.மீ
- எண்ணூர் 15.0 செ.மீ மழை பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.