கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களிடையேயான மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பிளஸ் டூ மாணவன் கவியரசன், மூளைச் சாவடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இம்மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்கள் கைது செய்யப்ப்ட்டு தஞ்சை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிளஸ் 2 மாணவர் கவியரசன் படுகாயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவன் கவியரசன் மூளைச் சாவடைந்தார். இந்த நிலையில் இன்று கவியரசன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 15 மாணவர்களை கைது செய்து தஞ்சாவூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
