சென்னையை அடுத்த மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நாளை (டிசம்பர் 22) நடைபெறும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
