ADVERTISEMENT

பொங்கல் பரிசு தொகுப்பு: ஜனவரி 8-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 8-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அடங்கியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், கரும்பு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்குவதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share