ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ரத்து!

Published On:

| By Pandeeswari Gurusamy

mkstalin visit coimbatore and open gd nayudu bridge

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 8 மாவட்டங்களுக்கும் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

வரும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் கனமழை காரணமாக முதல்வர் முக ஸ்டாலினின் தென்காசி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share