தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும், திமுக வேட்பாளர்களின் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை நாளை மறுதினம் (மார்ச் 31) திருவாரூரில் தொடங்க உள்ளார்.
மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஊரான திருவாரூரில் பரப்புரையை தொடங்குகிறார்.
பிரச்சார சுற்றுப்பயண விபரம்


