தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 26, 27-ந் தேதிகளில் சென்னை வருகை தருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மார்ச் 6-ந் தேதி 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் வரும் 26, 27-ந் தேதி சென்னைக்கு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார். சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்களை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
