சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்… வொண்டர்லா திறப்பு எப்போது? டிக்கெட் எவ்வளவு?

Published On:

| By Kavi

சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா தொடங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி இதனை முதலவ்ர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த தீம் பார்க்குகளில் ஒன்று வொண்டர்லா. கொச்சி, பெங்களூரு,  ஹைதராபாத், புவனேஷ்வர்  ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பெங்களூரு அல்லது கொச்சியில் உள்ள தீம் பார்க்கிற்கு சென்று விளையாடுவார்கள்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழகத்தில் தனது அடுத்த பொழுதுபோக்கு பூங்காவை சென்னையில் திறக்கவுள்ளது வொண்டர்லா நிர்வாகம்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள இள்ளளூர் கிராமத்தில், சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 64.30 ஏக்கர் பரப்பளவில், 510 கோடி ரூபாய் முதல் 611 கோடி ரூபாய் வரையிலான மிகப்பெரிய முதலீட்டில், 43 ரைடுகளுடன் நாளொன்றுக்கு 6500 பேர் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

இந்தசூழலில் வொண்டர்லா ஹாலிடேஸ் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் கே.சிட்டிலப்பிள்ளி, முதன்மை செயலாக்க அதிகாரி தீரன் சவுத்ரி, பொறியியல் துணைத் தலைவர் அஜிகிருஷ்ணன், சென்னை பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் ஆகியோர் சென்னையில் இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

ADVERTISEMENT

அவர்கள் கூறுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக தலைகீழாக தொங்கி பயணிக்கும் வகையில்  தஞ்சோரா ரோலர் கோஸ்டர், ஸ்விஸ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பறப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். 50 மீட்டர் உயரமுள்ள இந்தியாவின் மிக உயரமான சுழலும் த்ரில் சவாரி ஸ்பின் மில், ஸ்கை ரயில் போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு புதிய உணர்வை கொடுக்கும்.ஐரோப்பிய பாதுகாப்புத் தரச் சான்றிதழைப் பெற்றுள்ளோம்” என்றனர்.

கட்டணம் எவ்வளவு

வார நாட்களில் வயது வந்தவர்களுக்கு ரூ.1,489, குழந்தைகளுக்கு ரூ.1,191 முதியோர்களுக்கு ரூ.1,117

வார இறுதி நாட்களில் வயது வந்தவர்களுக்கு ரூ.1,779, குழந்தைகளுக்கு ரூ.1,423 , முதியோர்களுக்கு ரூ.1,334 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவுக்கு 10 சதவீதமும், நேரடியாக டிக்கெட் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும்.

நேரம்

வார நாட்களில் காலை 11 முதல் மாலை 6 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் 11 முதல் 7 மணி வரையில் திறந்திருக்கும்.

தண்ணீர் விளையாட்டுகளுக்கு வார நாட்களில் மதியம் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் 12.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

பிறந்த மாதத்தில் வருபவர்கள், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாகப் பெறலாம்.

ஸ்கை வீல் கோபுரத்தின் உச்சியில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் ஏசி உணவகம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share