சென்னையில் 89 மின்சார ரயில் சேவைகள் ரத்து- பயணிகள் கடும் அவதி

Published On:

| By Mathi

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் தற்காலிகக் குறைப்பும், கால அட்டவணை மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் தினசரி இயக்கப்படும் 204 மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக முதலில் 164 ஆகவும், தற்போது 115 ஆகவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பிப்ரவரி 20-ந் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்கு ஏப்ரல் 5-ந் தேதி வரை அமலில் இருக்கும் இந்த மாற்றங்கள், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் 10 மற்றும் 11 ஆம் நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, புறநகர் ரயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், தற்போது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) கூடுதலாக 50 பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. இது ஓரளவுக்குப் பயணிகளின் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share