18 ஆண்டுகால காத்திருப்பு.. சென்னை பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

Published On:

| By Mathi

ChennaiMRTS

சென்னை மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் (MRTS) நீட்டிப்பு சேவை இன்று, மார்ச் 14-ந் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த புதிய தடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், தென் சென்னை மக்களின் போக்குவரத்து சிரமம் தீர்ந்துள்ளது.

இன்று முதல், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 43 மின்சார ரயில் சேவைகள் இனி பரங்கிமலை வரை நீட்டிக்கப்படும். இதுதவிர, வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே 3 நேரடி ரயில்கள் இயக்கப்படும். கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ரயில்கள் வழக்கம் போல் செயல்படும்.

ADVERTISEMENT

புதிய கால அட்டவணையின்படி, சென்னை கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 5:00 மணிக்கு புறப்பட்டு காலை 6:05 மணிக்கு பரங்கிமலை சென்றடைந்தது.

இந்த பாதையில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் காரணங்களால் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புழுதிவாக்கம் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும்.

ADVERTISEMENT

பறக்கும் ரயில்
புறநகர் ரயில்
மெட்ரோ (Green Line)

ஆகிய மூன்றும் இயங்கக் கூடிய ரயில் நிலையமாக பரங்கிமலை உருவாகி உள்ளது.

ADVERTISEMENT

இது தென் சென்னையின் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share