சென்னை எழும்பூர் –திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.
இத்தகவலை டாக்டர் எல் முருகன் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் பணி நிமித்தமாக, விரைவான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்ற நோக்கில் விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அந்தக் கோரிக்கை மனுவை அண்மையில் தாம் ரயில்வே அமைச்சரிடம் வழங்கியதாகவும், அதனை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
