சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து

Published On:

| By Mathi

Dubai Flights

சென்னையில் இருந்து துபாய் செல்லும் அனைத்து விமானங்களும் இன்று மார்ச் 17-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீதான ஈரானின் தாக்குதல் தொடருகிறது. இதனால் சென்னையில் இருந்து துபாய் செல்லக் கூடிய 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்ட்ன.

ADVERTISEMENT

துபாய் விமான நிலையம் மீதான ஈரான் தாக்குதல் நீடிப்பதால் சென்னையில் இருந்து இன்றும் துபாய்க்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னதாக துபாய்க்கு சென்ற சென்னை விமானம் ஈரான் தாக்குதலால் சென்னைக்கே திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share