ADVERTISEMENT

சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு போறீங்களா… அப்போ இது உங்களுக்கு தான்!

Published On:

| By christopher

chengulpattu police give direction for diwali travellers

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று (அக்டோபர் 15) வெளியிட்ட அறிவிப்பில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் NH-32 (GST சாலை)-ல் புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், தீபாவளி பண்டிகைக்கு (17.10.2025 to 18.10.2025) தொடர் விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும்.

ADVERTISEMENT

I. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

II. மேலும், செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் – படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் – மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் GST சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

III. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் கீழ்க்கண்ட வழிகளில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

a) செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக திருமுக்கூடல் – நெல்வாய் X ரோடு – உத்திரமேரூர் – வந்தவாசி – திண்டிவனம் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

b) சென்னையிலிருந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

c) மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் GST சாலையில் 17.10.2025 காலை 06.00 மணி முதல் 18.10.2025 இரவு 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share