79வது சுதந்திர தினம் : முதல்வர் கையால் விருது பெறும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் காவல் அதிகாரிகள் – முழுப் பட்டியல்!

Published On:

| By christopher

cheif minister award list 2025 by tn govt

நாட்டின் 79வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் நாளை (ஆகஸ்ட் 15) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளாது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது சிறந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து விருதுகள், காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டுக்கான சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான விருது ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், நாமக்கல் மாநகராட்சி மேயர் டி.கலாநிதி ஆகியோர் முதல்வர் கையால் பெறுவர்.

ADVERTISEMENT

முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளன.

அதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெரம்பலூர் நகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விருதுகளை நகர்மன்றத் தலைவர்களான பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்), நாசர்கான் (ராமேஸ்வரம்), அம்பிகா ராஜேந்திரன் (பெரம்பலூர்) ஆகியோர் பெறுவர்.

ADVERTISEMENT

முதல் 3 இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்படும்.

இந்த வரிசையில் புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் தமிழகத்தின் 10 காவல்துறை அதிகாரிகள் நாளை தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெற உள்ளனர்.

அதன் பட்டியல்,

🔴க.த.பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர் சைபர் கிரைம் செல் பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

🔴பி. உலகராணி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திருநெல்வேலி.

🔴மா.லதா, காவல் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

🔴மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், மகுடஞ்சாவடி காவல் நிலையம், சேலம் மாவட்டம்.

🔴ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, தஞ்சாவூர்.

🔴வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திண்டுக்கல்.

🔴மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், பெருமாநல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம்.

🔴வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

🔴கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, அரியலூர்.

🔴இரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம்.


இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

    🔴முனைவர். மஹேஷ்வர் தயாள், ஐபிஎஸ்., கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும்
    சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை.

    🔴ஜெ. மகேஷ், காவல் துறைத் துணைத் தலைவர், நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை.

    🔴நை. சிலம்பரசன், காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம்.

    🔴கு. பிரவின் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,
    தலைமையகம், சென்னை.

    🔴தா.மேரிரஜு, காவல் ஆய்வாளர், சென்னை பெருநகர காவல்துறை

    விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share