ADVERTISEMENT

’கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே உடன் டான்ஸில் கலக்கிய நட்சத்திரம்!

Published On:

| By uthay Padagalingam

’மிஸ்டர் க்ளீன்’ என்று பெயர் வாங்கியவர்கள் சற்றே குரல் உயர்த்தினால், புருவத்தை நிமிர்த்தினால், உடல்மொழியில் தெனாவெட்டைக் கூட்டினால், சுற்றியிருப்பவர்கள் ‘இவரா இப்படி’ என்று விக்கித்துப் போவார்கள். Chaufin Shakir dances with Pooja Hegde

போலவே, இரும்பைப் போல விறைப்பாகத் திரிபவர்கள் சட்டென்று இளகிப்போனால் திணறிப் போவார்கள். சமூகத்தில் இந்த நிலைமை எனும்போது, வியந்து பார்க்கிற திரையுலகில் இது போன்று நிகழ்கிற தலைகீழ் மாற்றங்கள் சட்டென்ற கவனத்தைப் பெறும்.

ADVERTISEMENT

அதற்கான உதாரணம் ஆகியிருக்கிறது லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வீடியோ.

இது வெளியாகிச் சுமார் 20 மணி நேரத்தில் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. யூடியூப் ட்ரெண்டிங்கில் ’நம்பர் 1’ இடத்தை வகிக்கிறது.

ADVERTISEMENT

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா இடம்பெற்ற ‘காவாலா’ போல, இதில் ரசிகர்களைச் சொக்க வைக்க பூஜா ஹெக்டேவை அழைத்து வந்திருக்கிறது படக்குழு. அவரும் தனது வழக்கமான பாணியில் தோன்றி ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்.

இந்த பாடலில் ரிஷிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் சௌஃபின் ஷாகிரும் ஆடியிருக்கிறார்.

ADVERTISEMENT

‘டான்ஸ் கிலோ என்ன விலை’ என்று கேட்பதற்குப் பதிலாக, நடிப்புத் திறமையை மட்டுமே காண்பிக்கவல்ல பாத்திரங்களை ஏற்று வருபவர் சௌஃபின் ஷாகிர். அவரது நடிப்பில், உடல்மொழியில் ஒரு ‘டான்ஸ் ரிதம்’ இருந்தாலும் கூட, ஒரு பாடலில் நடனமாடுகிற வாய்ப்பு இதற்கு முன்னர் அவர் பெறவில்லை என்றே சொல்லலாம். அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது ‘மோனிகா’ பாடல்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு சாண்டி நடனத்தை வடிவமைத்திருக்கிறார். சௌபினுக்கு தகுந்தாற்போல அவர் அமைத்துள்ள அசைவுகள் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

‘டான்ஸ் ஆடும்போது, சௌஃபின் ஷாகிர் எனர்ஜி திரையில் ததும்புகிறது’ என்கிறவிதமாக, சமூகவலைதளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘பூஜா ஹெக்டேவை மறந்துபோகும் அளவுக்கு, அவரோடு போட்டியிடும் அளவுக்கு சௌபின் ஆட்டம் இருக்கிறது’ என்று நீள்கிறது அந்த புகழ்ச்சி மொழிகள். Chaufin Shakir dances with Pooja Hegde

Monica - Lyric Video| COOLIE | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh | Pooja Hegde
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share