ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 23ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Train Services

திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ( எண்: 16054) 23-ந் தேதி அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (எண்: 12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அன்று சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20643) வரும் 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share