கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால், சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள்:
வரும் 17ம் தேதி காலை 9.40 மணிக்கு புறப்படவிருந்த போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண் 66612) சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் 17ம் தேதி அன்று பிற்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படவிருந்த மெமு ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகள்:
- தாம்பரம் – மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16159) வரும் 16ம் தேதி அன்று புறப்படும். இந்த ரயில், வரும் 17ந்தேதி இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜங்ஷன் ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது.
- பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22644) வரும் 15ம் தேதி புறப்படும். இந்த ரயில், வரும் 17 அன்று இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்பதற்கு பதிலாக போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்.
- திப்ருகார் – கன்னியாகுமாரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22504)14ந் தேதி புறப்படும் நிலையில் வரும் 17ந் தேதி இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்பதற்கு பதிலாக, போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்.
- ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352) வரும் 17ந் தேதி காலை 6 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயில், போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்பதற்கு மாற்றாக போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்.
- எர்ணாகுளம் – கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) வரும் 17ம் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்பதற்கு பதிலாக போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்