கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் வரும் ஆகஸ்ட் 10ந் தேதி அன்று சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
போத்தனூரில் இருந்து காலை 09:40 மணிக்கு புறப்படவிருந்த போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில்(ரயில் எண்: 66612) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1:05 மணிக்கு புறப்படவிருந்த மேட்டுப்பாளையம் –போத்தனூர் மெமு ரயில் (ரயில் எண்: 66615) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள்
ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 13352), காலை 6 மணிக்கு கோவை ஜங்ஷனை தவிர்த்து, போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் ஜங்ஷனில் மாற்று நிறுத்தமாக நிற்கும்.
எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் – KSR பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12678), கோயம்புத்தூர் ஜங்ஷனை தவிர்த்து, போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலும் போத்தனூர் ஜங்ஷனில் மாற்று நிறுத்தமாக நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களை அமைத்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.