“டாக்டர் ஆகணும், இன்ஜினியர் ஆகணும்னு சின்ன வயசுலேயே பசங்களை கோச்சிங் சென்டர்ல சேர்த்துட்டு, அவங்க படுற கஷ்டத்தை பார்க்குறீங்களா? காலையில போனா ராத்திரி வரைக்கும் படிப்பு, படிப்புனு பசங்க மெஷின் மாதிரி ஆகுறாங்க…” என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு செம்ம செய்தி காத்திருக்கிறது.
மாணவர்களின் தற்கொலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க, மத்தியக் கல்வி அமைச்சகம் வினீத் ஜோஷி (Vineet Joshi) தலைமையில் அமைத்த உயர்மட்டக் குழு (High-Level Committee) சில அதிரடியான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
நேரம் குறைப்பு (Time Limit):
- இனி கோச்சிங் சென்டர்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
- “ஸ்கூல் முடிஞ்சதும் 5 மணி நேரம், 6 மணி நேரம்னு டியூஷன்ல உட்கார வைக்கக் கூடாது” என்று அந்தக் குழு கறாராகச் சொல்லியிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஓய்வும், மன நிம்மதியும் கிடைக்கும்.
12ஆம் வகுப்பு மார்க் முக்கியம் (Board Exam Weightage): இதுதான் தமிழக மாணவர்களுக்குத் தேவையான முக்கிய செய்தி! வெறும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்து அட்மிஷன் போடுவதால் தான் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதனால், இனி கல்லூரி அட்மிஷன்களில் பிளஸ்-2 போர்டு எக்ஸாம் மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் (Weightage) கொடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்காக ‘ஹைப்ரிட்’ (Hybrid Assessment) முறையைக் கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது, போர்டு எக்ஸாம் மார்க் + நுழைவுத் தேர்வு மார்க் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.
‘டம்மி’ பள்ளிகளுக்கு முடிவு: பல மாணவர்கள் பெயருக்கு ஒரு பள்ளியில் (Dummy Schools) அட்மிஷன் போட்டுவிட்டு, பள்ளிக்குப் போகாமல் முழு நேரமும் கோச்சிங் சென்டரிலேயே தவம் கிடக்கிறார்கள். இது ஒரு பெரிய பிசினஸாகவே நடக்கிறது.
இனி இந்த வேலைக்கு ஆகாது. பள்ளிப் பாடத்திட்டத்திற்கும், போட்டித் தேர்வுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, பள்ளிக் கல்விக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று ரிப்போர்ட் சொல்கிறது.
ரீஃபண்ட் பாலிசி (Refund Policy): “பிடிக்கலன்னு பாதியில நின்னாலும் பணத்தைத் தர மாட்டோம்” என்று அடம் பிடிக்கும் கோச்சிங் சென்டர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. மாணவர் எப்போது விலகினாலும், படித்த நாட்களுக்கான கட்டணத்தைப் போக, மீதிக் கட்டணத்தை 10 நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
பாடத்திட்டம் மாறப்போகுது: “ஸ்கூல்ல நடத்துறது ஒன்னு… என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல கேக்குறது வேற” என்ற புலம்பலைத் தீர்க்க, பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை (Curriculum) போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும் என்.சி.இ.ஆர்.டி (NCERT)-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங், மெடிக்கல் கனவு முக்கியம் தான். ஆனா, அதுக்காக உங்க பிள்ளைகளோட தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்காதீங்க. புது ரூல்ஸ் படி, இனி போர்டு எக்ஸாம் மார்க்கும் முக்கியம் ஆகப்போகுது. அதனால, ‘என்ட்ரன்ஸ் எக்ஸாம் படிச்சா போதும்’னு ஸ்கூல் பாடங்களை அசால்ட்டா விடாதீங்க. ஸ்கூல் புக்ஸ் தான் இனி உங்க பைபிள்! அதே மாதிரி, கோச்சிங் சென்டர்ல சேரும்போதே ‘ரீஃபண்ட் பாலிசி’ பத்தி தெளிவா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!
