ஹோலி பண்டிகை (Holi Festival) நெருங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முன் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அகவிலைப்படி உயர்வு ஹோலி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்படுமா என்பதுதான் பெரிய கேள்வி.
மத்திய தொழிலாளர் பணியகம் 2025 டிசம்பர் மாதத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு – தொழில்துறை தொழிலாளர்கள் (AICPI-IW) அறிக்கையை வெளியிட்டது. அது 148.2 புள்ளிகளாக இருந்தது. இதன் அடிப்படையில் இந்த முறை அகவிலைப்படி 2% அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அகவிலைப்படி 58% ஆக உள்ளது. அதன் பிறகு அது 58% இலிருந்து 60% ஆக அதிகரிக்கும். இந்த உயர்வு 2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும்.
அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. முதல் உயர்வு ஜனவரியிலும் இரண்டாவது உயர்வு ஜூலையிலும் வழங்கப்படும். இருப்பினும், இது வழக்கமாக ஹோலி அல்லது தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளுக்கு முன்பு அறிவிக்கப்படும். இந்த முறை மார்ச் முதல் வாரத்தில் அரசு அகவிலைப்படியை அறிவிக்கலாம். இந்த அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஹோலிக்கு முன் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் மன்ஜீத் சிங் படேல் கூறியுள்ளாறார்.
அகவிலைப்படி உயர்வு ஏன் அவசியம்?
பணவீக்கத்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கத்தால் அகவிலைப்படி அறிவிக்கப்படுகிறது. அடிப்படை சம்பளம் ஊதியக் குழுவில் நிலையானதாகவே உள்ளது. ஆனால் அகவிலைப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 20205 டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது. இருப்பினும், 8ஆவது ஊதியக் குழுவை செயல்படுத்த ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை, அடிப்படை சம்பளம் அப்படியே இருக்கும். ஆனால் அகவிலைப்படி தொடர்ந்து அதிகரிக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தை உயர்த்தும்.
