2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதில் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.53.5 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டை விட இது சுமார் 7.9% (ரூ.49.6 லட்சம் கோடி)அதிகமாகும்.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை – ரூ.5,98,520 கோடி
பாதுகாப்பு துறை – ரூ.5,94,585 கோடி
ஊரக வளர்ச்சித்துறை – ரூ. 2,73,108 கோடி
உள் துறை – ரூ. 2,55,234 கோடி
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை – ரூ. 1,62,671 கோடி
கல்வித்துறை – ரூ.1,39,289 கோடி
எரிசக்தி துறை – ரூ.1,09,029 கோடி
சுகாதார துறை – ரூ. 1,04,599 கோடி
நகர்ப்புற வளர்ச்சித்துறை – ரூ.85,522 கோடி
தகவல் தொழில்நுட்பத்துறை – ரூ.74,560 கோடி
வணிகம் மற்றும் தொழில்துறை – ரூ.70,296 கோடி
சமூக நலத்துறை – ரூ.62,362 கோடி
அறிவியல் துறை – ரூ.55,756 கோடி
வரி நிர்வாகம் – ரூ.45,500 கோடி
வெளியுறவுத்துறை – ரூ.22,119 கோடி
நிதித்துறை – ரூ.20,649 கோடி
வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு- ரூ.6,182 கோடி
முக்கிய மானியம் – ரூ.4,10,495 கோடி
மற்றவை -ரூ. 5,56,021 கோடி
