திரையுலகில் 50 ஆண்டுகள்… ரஜினிக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்து மழை!

Published On:

| By christopher

celeberities pouring wishesh for rajini 50 years

1975ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகம் ஆனவர் ரஜினிகாந்த். ஆரம்பக்காலங்களில் துணை கதாப்பாத்திரங்கள் மற்றும் வில்லன் வேடத்தில் தோன்றியவர் அடுத்த இரண்டாண்டுகளில் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்தார்.

அதன்பின்னர் முள்ளும் மலரும், பில்லா, முரட்டுக்காளை பாட்ஷா, படையப்பா, முத்து, அண்ணாமலை, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், ஜெயிலர் தற்போது வரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

ADVERTISEMENT

தற்போது அவருக்கு 74 வயதாகும் நிலையில் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். பொன்விழா கொண்டாடும் வேளையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை அரை நூற்றாண்டாக ஆளும் அவருக்கு இந்திய திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன் தொகுப்பு இதோ…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

ADVERTISEMENT

நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

‘கூலி’ மாபெரும் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன்

அரை நூற்றாண்டு சினிமா திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த்
சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

கூலி எப்போதும் என் பயணத்தில் ஒரு சிறப்புப் படமாக இருக்கும். மேலும் இந்தப் படம் அனைவரும் தங்கள் இதயங்களையும் அன்பையும் அதில் கொட்டிய விதத்தில் உருவானதற்குக் காரணம் உங்களால்தான் தலைவர் ரஜினிகாந்த் சார்.

இந்த வாய்ப்புக்கும், என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பேன்! இவை நான் எப்போதும் போற்றும் தருணங்கள், ஒருபோதும் மறக்க மாட்டேன் ❤️

எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்ததற்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி, மேலும் நாங்கள் உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுடன் வளரவும் புகழ்பெற்ற 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நாங்கள் உங்களை என்றும் நேசிக்கிறோம் தலைவா ❤️

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்த்க்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,

இப்பொன்விழா ஆண்டில் அவரது நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.

மலையாள நடிகர் மம்மூட்டி


சினிமாவில் வளமான 50 வருடங்கள் நிறைவு செய்துள்ள அன்புள்ள ரஜினிகாந்த்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே ஒரு மரியாதை. கூலிக்கு வாழ்த்துக்கள். எப்போதும்போல உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருங்கள்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

இந்திய திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், திரையுலக பொன்விழா நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து பல தசாப்தங்களாக முன்னணியில் இருப்பதுடன், இந்திய சினிமாவின் சர்வதேச அடையாளமாகவும் ரஜினிகாந்த், இன்னும் மென்மேலும் பல உச்சங்களைத் தொட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்

50 ஆண்டுகள். 1 சிம்மாசனம். 1 மனிதர்.

நாளை வெளியாகும் கூலி திரைப்படத்துடன் தலைவர் சூப்பர் ஸ்டாரின் பொன் விழாவை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.

கடவுளின் ஆசீர்வாதங்களுடனும் உங்கள் அனைவரின் அன்புடனும் 🙏🏻

காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்

இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி காந்த்க்கு ஒரு ரசிகனாக எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

வெள்ளித்திரை வரலாற்றில் விடிவெள்ளியாய் ஜொலிக்கும் நட்சத்திரம்..

பேச்சிலும், நடையிலும் தனக்கென ஒரு தனி பாணியை கையாளும்
கலைக்குரிசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

திரைவானில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி!

அவரது கலைச்சேவை தொடரவும், அடுத்த படைப்பான கூலித் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவும் மனங்கனிந்த வாழ்த்துகள்! 💐

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்

ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் இருந்து எடுத்து வைத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர் ரஜினிகாந்த் ஐயா, தொடர்ந்து ஒரு உத்வேகமாகவும் தரமாகவும் இருங்கள். 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்!

பாஜக மாநில துணை பொதுச்செயலாளர் குஷ்புசுந்தர்

இன்று நீங்கள் இந்த நிலையில் இருக்க அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் தொழில்முறைத்திறன் தேவை. இந்தியத் திரையில் உங்களைப் போன்ற ஒரு நட்சத்திரம் இதற்கு முன்பும், அதற்குப் பிறகும் இருந்ததில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம் ஐயா. 50வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்❤️

கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம்

ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம்

புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி

தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்

“இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது” என்று
முத்து படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share