CBSE 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாள்.. ரொம்ப ’டஃப்’.. மாணவர்கள் அதிர்ச்சி- மறு தேர்வு நடத்த கோரிக்கை!

Published On:

| By Mathi

CBSE 10th Maths

மத்திய அரசு பாடத் திட்ட தேர்வு வாரியமான
சிபிஎஸ்இ (CBSE)-ன் 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாள் கடுமையாக இருந்ததாகவும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. இதில் Basic Mathematics கணக்கு வினாத்தாள் மிக கடுமையாக இருந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளன. பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்தும் கூட கணக்கு வினாக்கள் கேட்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதனால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share