கரூர் சம்பவம்: சிபிஐ சம்மன்- செந்தில் பாலாஜி விளக்கம்

Published On:

| By Mathi

Karur CBI

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..

ADVERTISEMENT

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share