நட்சத்திர ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை நடத்தி வரும் தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
நட்சத்திர ஹோட்டல்கள், தரணி சுகர்ஸ் நிறுவனம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பழனி ஜி.பெரியசாமியின் வீட்டில் இன்று ஆகஸ்ட் 12-ந் தேதி சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல பெரியசாமிக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.