கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே 3 நாட்கள் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து விஜய்யையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு ஆஜராக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் விஜய்.
டெல்லி சென்றடையும் விஜய்க்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகும் விஜய்யிடம் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
