மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர்… பெண்கள் பாதுகாவலரா? எச்.ராஜா சாடல்

Published On:

| By Mathi

H Raja

”மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதா? என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு…

ADVERTISEMENT

அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்…

மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும்…

ADVERTISEMENT

தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு..!!. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share