“கண்ணாடி முகம் போய்… இப்போ ‘வெண்ணெய்’ முகம்!” – இதுதான் 2026-ன் புது டிரெண்ட்… ‘பட்டர் ஸ்கின்’ ரகசியம் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

butter skin trend replaces glass skin skincare routine 2026 healthy glow barrier repair tamil beauty tips

கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் எங்கு திரும்பினாலும் கிளாஸ் ஸ்கின்’ (Glass Skin) என்ற வார்த்தையைத்தான் கேட்டுக்கொண்டிருந்தோம். முகம் கண்ணாடி போல பளபளக்க வேண்டும், ஈ வழுக்கி விழும் அளவுக்கு ஷைனிங் இருக்க வேண்டும் என்று கொரியன் (Korean) அழகு முறையை அனைவரும் பின்பற்றினார்கள்.

ஆனால், 2026-ல் அந்த டிரெண்ட் காலியாகிவிட்டது. இப்போது உலக அழகுக் கலை நிபுணர்கள் பரிந்துரைப்பது பட்டர் ஸ்கின்” (Butter Skin).

ADVERTISEMENT

என்ன இது ‘பட்டர் ஸ்கின்’? பெயரில் இருப்பது போலவே, இது வெண்ணெய் போன்றது.

  • வித்தியாசம்: கிளாஸ் ஸ்கின் என்பது முகத்தின் மேற்புறம் மட்டும் பளபளப்பைக் காட்டுவது (High Shine). ஆனால், பட்டர் ஸ்கின் என்பது முகத்தின் உள்ளிருந்து வரும் ஆரோக்கியமான பொலிவு (Healthy Glow).
  • அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட வெண்ணெய் (Room temp butter) எப்படி மென்மையாகவும், லேசான மினுமினுப்புடனும் இருக்குமோ, அப்படித் தோலை மாற்றுவதுதான் இதன் நோக்கம்.

ஏன் இந்த மாற்றம்? கிளாஸ் ஸ்கின் பெற வேண்டும் என்பதற்காகப் பலர் அளவுக்கு அதிகமாக ஸ்க்ரப் (Scrub) செய்து, தோலின் இயற்கையான பாதுகாப்பு அரணை (Skin Barrier) சேதப்படுத்திவிட்டனர்.

ADVERTISEMENT
  • பட்டர் ஸ்கின் டிரெண்ட், அந்தத் தவற்றைத் திருத்துகிறது. இது “அழகு” என்பதை விட “ஆரோக்கியத்திற்கு” முன்னுரிமை கொடுக்கிறது.
  • செயற்கையான ஹைலைட்டர் (Highlighter) மேக்கப் போடுவதற்குப் பதில், தோலை ஆழமாக ஈரப்பதமாக்குவதே (Deep Hydration) இதன் அடிப்படை.

பட்டர் ஸ்கின் பெறுவது எப்படி?

  1. செராமைட்ஸ் (Ceramides): உங்கள் மாய்ஸ்சரைசரில் (Moisturizer) செராமைட்ஸ் மற்றும் பெப்டைட்ஸ் (Peptides) இருக்கிறதா என்று பாருங்கள். இவை தோலின் தடுப்புச் சுவரை வலுப்படுத்தும்.
  2. ஷியா பட்டர் (Shea Butter): இதுதான் இந்த டிரெண்டின் ஹீரோ. ஷியா பட்டர் அல்லது கோக்கோ பட்டர் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்துவது அந்த “வெண்ணெய் போன்ற” மென்மையைத்தரும்.
  3. உணவு: இது வெறும் க்ரீம் பூசுவது மட்டுமல்ல. உணவில் நல்ல கொழுப்புகளைச் (Good Fats) சேர்க்க வேண்டும். நெய், அவகேடோ (Avocado), பாதாம் மற்றும் மீன் உணவுகளைச் சாப்பிடுவது உள்ளிருந்து பளபளப்பைக் கொடுக்கும்.

முடிவு: கண்ணாடி போல முகம் இருக்க வேண்டும் என்று கஷ்டப்படுவதை விட, வெண்ணெய் போல மென்மையாக வைத்துக்கொள்வது சுலபம் மற்றும் ஆரோக்கியமானது. மேக்கப் இல்லாமலேயே அழகாகத் தெரிய வேண்டும் என்றால், இனி ‘பட்டர்’ தான் பெட்டர்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share