டிஜிட்டல் திண்ணை: ’வாய்ஸ்’ கொடுத்த மா.செ.க்கள்.. ‘டபுள் கேம்’ ஆடிய புஸ்ஸி ஆனந்த்.. ’செம்ம டோஸ்’ விட்ட விஜய்.. டெல்லியில் ‘சம்பவம்’ வெயிட்டிங்?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “ஏனோ ஏனோ எனக்கு மட்டும் ஏன்தானோ” என்ற வரிகளை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. எந்த கட்சியில யாருக்கு இது?

ADVERTISEMENT

யாருக்குமில்லைய்யா.. இப்ப ரொம்பவே மீடியாவுல விஜய்- பாஜக கூட்டணி பத்திதான் பேசுறாங்க இல்லையா?

பாஜக- தவெக கூட்டணி கன்ஃபார்ம் ஆகிடுச்சாம்.. விஜய் தவெகவுக்கு 60 சீட், டெபுடி சிஎம் போஸ்ட்-க்கு ஓகே சொல்லிட்டாங்களாம்.. புஸ்ஸி நேத்து நடத்துன மா.செ.க்கள் கூட்டமே கூட்டணியை பைனல் செய்யத்தானாம்.. டெல்லிக்கு போற விஜய்கிட்ட பாஜக கூட்டணியை முடிவு செய்யுற பேச்சுவார்த்தை நடக்கப் போகுதாம்..

ADVERTISEMENT

”கரூரில 41 பேர் இறந்ததுக்கு திமுக செந்தில்பாலாஜிதான் காரணம்னு சிபிஐ ஒரு ஸ்டேட்மெண்ட் தர… அதை வெச்சு ‘நம்ம ஆட்கள் 41 பேரை கொன்ற திமுகவை பழிவாங்க பாஜக கூட்டணிக்குப் போறோம்னு விஜய் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்து கூட்டணி உருவாகிடுமாம்”… இப்படித்தான் மீடியா டிபேட்டுல இருந்து சோசியல் மீடியா வரைக்கும் ஒரே பேச்சா இருக்குதுய்யா..

ஆமா.. இதை எல்லாம் தீர விசாரிச்சீரா?

ADVERTISEMENT

நல்லாவே விசாரிச்சாச்சுய்யா… விஜய் கூடவே இருக்கிறவங்ககிட்ட இதைப் பத்தி பேசுனப்ப, “புஸ்ஸி ஆனந்த் நேத்து வீடியோ கான்பரன்ஸ் மூலமா நடத்துன மாவட்ட செயலாளர்கள் கூட்டமே, “தேர்தல்ல கூட்டணி அமைத்து போட்டியிடவா? தனியாக போட்டியிடவா?”ன்னு ஆலோசனை நடத்தன்னு எல்லாரும் சொல்றாங்க..

ஆனா அந்தக் கூட்டம் அதுக்காக நடத்தப்படவே இல்லைங்கிறதுதான் உண்மை சார்.

சட்டசபை தேர்தல் வேலையை எப்படி செய்யுறது?ன்னு ஆலோசிக்கத்தான் இந்தக் கூட்டமே நடந்துச்சு.. அதாவது, ஒரு தொகுதிக்கு 3 மேற்பார்வையாளர்களை நியமிக்கிறது.. இந்த டீம், கட்சி வேட்பாளர்கள் என்ன செய்யுறாங்க? தொகுதியில கட்சியோட நிலவரம் என்னான்னு “வார் ரூம்”-க்கு ரிப்போர்ட் அனுப்பனும்.. அப்படிங்கிறதை மா.செ.க்களுக்கு சொல்றதுக்குதான் கூட்டமே நடந்துச்சு சார்..

அப்ப கூட்டணியை பத்தி பேசலையான்னு கேட்காதீங்க.. பேசுனாங்கதான்.. தொகுதியில வேலை செய்யறதை பத்தி எல்லோரும் பேசிகிட்டு இருக்கும் போது, கடலூர் மாவட்ட செயலாளர்தான் ‘கூட்டணி’ விவகாரத்தை ஆரம்பிச்சாரு.. அவருதான், “முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருத்தர் என்னை சந்திச்சாரு.. உங்க தளபதியை எப்படியாவது நம்ம கூட்டணிக்கு கொண்டு வந்துடுங்க.. நீங்க எல்லாம் MLA, மேயர், துணை மேயர்னு பதவிகளை வாங்க வேண்டாமா? கூட்டணி இல்லாம இது எல்லாம் முடியுமா? உங்க தளபதியை நான் நேர்ல பார்த்து சொல்ல முடியாது.. அதனால உங்க மூலமா சொல்லி அனுப்பறேன்.. இதை எப்படியாவது தளபதிகிட்ட சொல்லிடுங்க”ன்னு சொன்னாரு… அதனால நாம பாஜக கூட்டணிக்கு போகலாம்னு பேசுனாரு..

அவருக்கு அப்புறமா புதுக்கோட்டை மா.செ. பேசுறப்ப “நான் ஒரு முஸ்லீம். நானே சொல்றேன்.. நாம பாஜக கூட்டணிக்கு போகலாம்..”னு சொன்னார்.

அதோட சில மா.செ.க்கள், “ நாம தனிச்சுதான் போட்டியிடனும்.. நம்ம தளபதிதான் சிஎம்.. நம்ம தளபதியை சிஎம்மா ஏத்துகிட்டவங்க கூடதான் கூட்டணி.. நாமதான் அவங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி தரனும்.. அவங்ககிட்ட நாம தொகுதிகளை கேட்கக் கூடாது” ன்னு சொன்னாங்க..

இன்னும் சில மா.செக்கள், “தளபதிக்கு டெபுடி சிஎம் பதவி கொடுத்தா கூட ஓகேதான்.. கூட்டணிக்கு போயிடலாம்”னு சொன்னாங்க..

ஒரு சில மா.செ.க்கள், “அப்படி எல்லாம் பாஜகவுடன் கூட்டணிக்கு போனா நம்ம கட்சி ஆரம்பிச்ச நோக்கத்துக்கே எதிரா போயிடும்.. இப்ப இருக்கிற மக்களோட ஆதரவையும் இழந்துடுவோம்.. எப்பவும் நம்ம தலைவர்தான் சிஎம்.. நாம கூட்டணிக்கு எல்லாம் போக வேண்டாம்”னு சொல்லி வாதிட்டாங்க… இதுதான் மா.செ.க்கள் கூட்டத்துல நடந்தது சார்” என்கின்றனர்.

மேலும், “இந்த கூட்டம் முடிஞ்சதும் விஜய்யை புஸ்ஸி ஆனந்த் போய் பார்த்தாரு… அப்ப நம்ம மா.செ.க்கள் கூட்டணி விஷயத்துல இந்த மாதிரி கருத்துகளை சொல்லி இருக்காங்க”ன்னு புஸ்ஸி சொல்லிகிட்டு இருக்கும் போதே விஜய் முகம் கோபமா மாறிடுச்சு..

அதே கோபத்துல, “உங்களுக்கு எதுக்காக கூட்டம் நடத்த பெர்மிஷன் கொடுத்தேன்? கூட்டணியை பத்தி பேசுறதுக்கா உங்க கிட்ட மா.செ.க்கள் கூட்டத்தை நடத்துங்கன்னு சொன்னேன்? எலக்‌ஷன் வேலையை பார்க்கிறதுக்குதானே கூட்டத்தை நடத்த சொன்னேன்.. நீங்க என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க?

நீங்களே சில மா.செ.க்களை கூப்பிட்டு, கூட்டத்துல இப்படி எல்லாம், கூட்டணிக்கு போகனும்.. அப்படி பேசுனங்கன்னு சொல்லி இருக்கீங்க.. அது எனக்கும் தெரியும்.. இங்க பேசுனது எல்லாத்தையும் மீடியாவுக்கும் நீங்களே சொல்லி இருக்கீங்க…”ன்னு புஸ்ஸியை செம்மையா கத்திவிட்டாரு” என்றனர்.

அத்துடன், சார்.. இங்க எங்க கட்சிக்குள்ளேயே பிரச்சனையா இருக்குது.. 234 தொகுதிகளிலும் போட்டி போட வேட்பாளர்களும் கிடைக்கலை.. ஆனால் எந்தெந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் இல்லையோ அந்த தொகுதிகளில் எல்லாம் விருப்ப மனு வந்த மாதிரி புஸ்ஸி ஆனந்தே ரெடி செஞ்சு கணக்கு காட்டிட்டாரு..

எங்க கட்சி வேட்பாளர்கள், கூட்டணி இல்லாம போட்டி போடவே பயப்படுறாங்க.. கூட்டணி வேணும்னு நினைக்கிறாங்க..

இதுநாள் வரைக்கும் ”கூட்டணி எல்லாம் வேண்டாம்.. தனிச்சே போட்டியிடுவோம்”னு சொன்ன ஆதவ் அர்ஜூனாவும் கூட கூட்டணி இருந்தாதான் சரியா வரும்னு பேசுறாரு..

ஆனால் அட்வைசர் ஜான் சொல்றது வேற மாதிரி இருக்கு.. கரூர்ல 41 பேர் இறந்தப்ப அவங்களை போய் பார்க்காம சென்னைக்கு திரும்பி வந்துடுங்கன்னு சொன்னவரும் ஜான் ஆரோக்கியசாமிதான்..

கரூரில பாதிக்கப்பட்டவங்களை நேர்ல சந்திக்க போனா உங்க உயிருக்கே ஆபத்தாகிடும்னு விஜய்யை கரூருக்கு போகவிடாம தடுத்தவரும் ஜான் ஆரோக்கியசாமிதான்..

திரிஷா கூட ஒரே கார்ல பங்ஷனுக்கு போனா என்ன ரியாக்‌ஷன் வரும்னு விஜய் கேட்டதுக்கு, “அதெல்லாம் ஒன்னும் நெகட்டிவா இருக்காது..”ன்னு சொல்லி அனுப்பி வெச்சவரும் ஜான் தான்..

அந்த ஜான் என்ன சொல்றாரோ அதை கேட்டுதான் விஜய் நடக்கிறாரு..

அப்படிப்பட்ட ஜான் சொல்றது என்னான்னா, “நமக்கு சிஎம் போஸ்ட்தான் டார்கெட்… நம்ம கட்சிக்காரங்களும் அமைச்சர்களாகனும்.. நாம பாஜக கூட்டணிக்குப் போனா ரெண்டரை வருஷம் சிஎம் போஸ்ட்னு சொன்னாங்க.. நாமும் ஓகே சொன்னோம்.. ஆனா அதுக்கு அப்புறம் எந்த ஆக்‌ஷனுமே இல்லையே..

முதல்ல ரெண்டரை வருஷம் சிஎம் அப்படிங்கிறதுக்கு எடப்பாடி எப்படி ஒத்துக்குவாரு? அவரைப் பொறுத்தவரைக்கும் மெஜாரிட்டி பலத்தோட ஆளும் கட்சியாக உட்காரனும்தானே நினைப்பாரு?

நமக்கு சீட் அவ்வளவு தர்றோம்.. இவ்வளவு தர்றோம்னு சொல்லி கமிட் பண்ண வெச்சிட்டாங்கண்ணா நம்ம எதிர்காலம்தான் ரொம்ப மோசமா பாதிக்கும்.. அதனால பாஜகவோட கூட்டணி பேச்சுக்கே பிடி கொடுத்துட வேண்டாம்..

அப்படி இல்லாம கூட்டணிக்குள்ள போன நம்ம கட்சியை, “Political Rape” பண்ணிடுவாங்க.. அந்த அளவுக்கு மோசமா இருக்கும் நிலைமை..

சிஎம் பதவி கொடுத்தா மட்டும் கூட்டணிக்கு போகலாம்.. அது இல்லாம கூட்டணிக்குள்ள போனா நம்ம கட்சியோட எதிர்காலமே சூனியமாகிப் போயிடும்”னு எச்சரிச்சிருக்காரு” என்கின்றனர்.

சரி… விஜய் டெல்லிக்கு போறாரே?

ஆமாய்யா.. கரூர் கேஸ்ல நாளைக்கு சிபிஐ ஆபீசில ஆஜராக இன்னைக்கே கிளம்பிய விஜய் நைட் டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டல்ல தங்குறாரு.. அவரைப் பொறுத்தவரைக்கும் நாளைக்கு சிபிஐ என்ன கேள்வி கேட்கும்? அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு ’ரெடி’யாக முன்கூட்டியே டெல்லிக்கு போறாரு..

ஆனா ஒரு சில குரூப், விஜய்யை எப்படியாவது சந்திச்சு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?ன்னு முயற்சி செஞ்சுகிட்டுதான் இருக்குது..

இப்ப நிலவரப்படி விஜய் நாளைக்கு சிபிஐ முன்னாடி ஆஜராகிட்டு விசாரணை முடிந்த உடனே உடனே சென்னைக்கு ரிட்டர்ன் ஆகனும்னுதான் ப்ளான் பண்ணியிருக்காரு.. டெல்லிக்கு போய் கால் வைச்சதும்தான் அங்கே என்ன நடக்கும்? ஏது நடக்கும்? மீடியாக்கள் அரைக்க அவல் கிடைக்குமான்னு எல்லாம் தெரிய வரும்யா என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share