பாஜகவில் இருந்து விலகி தேர்தலில் தனித்து போட்டியா? அண்ணாமலை பதில்

Published On:

| By Mathi

Annamalai

பாஜகவில் இருந்து விலகி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவில் அண்மையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அண்ணாமலை திடீரென தாம் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சிவகங்கையில் நேற்று அண்ணாமலையிடம், “நீங்கள் பாஜகவை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட இருக்கிறீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “என்னை பார்த்தா அப்படியா தெரியுது? பாஜக மாவட்டத் தலைவர் இங்கிருக்கார், பாஜக மூத்த தலைவர்கள் இங்கிருக்காங்க. அனைவருடனும் நின்றுகொண்டிருக்கின்றோம். அன்புக்குக் கட்டுப்பட்டு இங்கே இருக்கிறோம் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share