ஹரியானாவின் வாக்காளர் பட்டியலில் பிரேல் பெண் மாடலின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும், போலி புகைப்படங்களுடன் 5.21 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் போலி புகைப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் அதை ஏன் பயன்படுத்துவதில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா தேர்தல்களின் போது வாக்குகள் திருடப்பட்டதை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் பீகாரில் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெற உள்ள சூழலில் இன்று தலைநகர் டெல்லியில் ஹரியானாவில் நடந்த வாக்கு திருட்டு குறித்து உரிய ஆவணங்களுடன் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சுமார் 22,779 வாக்குகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்குகளை உருவாக்கி மத்திய அரசு ஆட்சி திருட்டை நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளர். மேலும் ஹரியானாவில் உள்ள பட்டியலில் எட்டு பேரில் ஒருவர் போலி வாக்காளர் என்றும் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளர். மேலும் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், ஹரியானாவில் ஒரே முகவரியில் 500 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன என்றும் குற்றம் சாட்டி உள்ளார். பத்துக்கு பத்து அளவு கொண்ட வீட்டில் 501 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து 223 வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 93,174 வாக்காளர்களுக்கு உரிய முகவரி இல்லை. அதேசமயம் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் உத்தரபிரதேசத்திலும், ஹரியானாவிலும் வாக்களித்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரேசில் மாடல்
பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவின் ராய் தொகுதியில் மட்டும் பிரேசில் மாடல் ஒருவர் 22 முறை வாக்களித்துள்ளார் என அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துள்ளார்.
