ஆளுநர் தேநீர் விருந்து : காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Published On:

| By easwari minnambalam

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஆளுநரின் தேர்

ADVERTISEMENT

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுக, மற்றும் இடதுசாரி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share