திருநெல்வேலி அருகே அரிவாளால் வெட்ட முயன்றதாக சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு (Police Open Fire) நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி பாப்பாகுடியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தடுக்க போலீசார் விரைந்தனர்.
இருதரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் இருக்க போலீசார் தடுத்து வந்தனர். அப்போது திடீரென, போலீசாரை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார், அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சிறுவன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.