பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடி குண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது இல்லத்தில் உள்ள தொலைபேசியை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
தமிழகத்தில் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்ட்ல் வந்த வண்ணம் உள்ளது. இதுபோல் சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் போலீசாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
