சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை த்ரிஷா, நயன்தாரா, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இல்லங்களுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தன.
மேலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையங்கள், பாஸ்போட் அலுவலகங்கள், உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர், ஆகிய நாடுகளின் தூதரகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகிளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.