அதிமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை இன்று (அக்டோபர் 5) சோதனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லம், தவெக தலைவர் விஜய்யின் பனையூர் இல்லம் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுக்கு தொடர்ந்து ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்தும் சோதனையில் அது வதந்தி என்பதும் வாடிக்கையாகி வருகிறது. எனினும் மிரட்டல் விடுக்கும் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தின் பல்வேறு அறைகள் உள் சுற்றுவட்டார பகுதி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இன்றைக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என்ற போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.