மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக இன்று உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.
மக்களவையில் மத்திய பட்ஜெட் குறித்து பேசிய ராகுல் காந்தி, “நாட்டை பிரதமர் மோடி விற்பனை செய்துவிட்டார்” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.
இந்நிலையில், மக்களவைக்கு தவறான தகவல்களை வழங்கியதாக ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பும் தீர்மானத்தை பாஜக இன்று கொண்டு வருகிறது. ஏற்கனவே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
