பெருநிறுவன தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக ₹3,112 கோடி வசூல்- காங்கிரஸுக்கு எவ்வளவு ‘பங்கு’?

Published On:

| By Mathi

Corporate Electoral Trust Donations

தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெற்றுள்ள நிதி குறித்த தரவுகள் பெரும் விவாதப் பொருளாகி இருக்கின்றன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 2024-25 நிதியாண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடையில் பெருமளவு பணத்தை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுசெய்யப்பட்ட ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் மொத்தம் ₹3,811 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டில் கிடைத்த ₹1,218 கோடியை விட 200% அதிகம் என்பது

ADVERTISEMENT

புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை, அதிகபட்சமாக ₹2,668 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதில் ₹2,180 கோடியை பாஜகவே பெற்றுள்ளது. ஜிண்டால் ஸ்டீல், ஏர்டெல், அரவிந்தோ பார்மா போன்ற பெருநிறுவனங்கள் இந்த அறக்கட்டளை மூலம் நிதியளித்துள்ளன. அதேபோல், டாடா குழுமத்தின் புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை தனது மொத்த நன்கொடையான ₹914 கோடியில் 80% பாஜகவுக்கு வழங்கியுள்ளது. டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இதன் மூலம் பங்களித்துள்ளன. மகிந்திரா குழுமத்தின் நியூ டெமாக்ரடிக் அறக்கட்டளை திரட்டிய ₹160 கோடியில் ₹150 கோடியை பாஜகவுக்கே அளித்துள்ளது.

அறக்கட்டளைகளும் நன்கொடைகளும்:

ADVERTISEMENT

Prudent Electoral Trust:

மொத்த நன்கொடை: ₹2,668.46 கோடி
பாஜக: ₹2,180.71 கோடி
காங்கிரஸ்: ₹21.63 கோடி

ADVERTISEMENT

Progressive Electoral Trust

மொத்த நன்கொடை: ₹914.97 கோடி
பாஜக: ₹757.62 கோடி
காங்கிரஸ்: ₹77.34 கோடி

New Democratic Electoral Trust

மொத்த நன்கொடை: ₹160 கோடி
பாஜக: ₹150 கோடி
காங்கிரஸ்: ₹5 கோடி

Harmony Electoral Trust

மொத்த நன்கொடை: ₹35.65 கோடி
பாஜக: ₹30.15 கோடி

Triumph Electoral Trust

மொத்த நன்கொடை: ₹25 கோடி
பாஜக: ₹21 கோடி

Samaj Electoral Trust Association

மொத்த நன்கொடை: ₹6 கோடி
பாஜக: ₹3 கோடி

Janpragati Electoral Trust

மொத்த நன்கொடை: ₹1.02 கோடி

Jankalyan Electoral Trust

மொத்த நன்கொடை: ₹19 லட்சம்
பாஜக: ₹9.50 லட்சம்
காங்கிரஸ்: ₹9.50 லட்சம்

Einzigartig Electoral Trust

மொத்த நன்கொடை: ₹7.75 லட்சம்
பாஜக: ₹7.75 லட்சம்

மொத்தம்: ₹3,811.37 கோடி
பாஜக: ₹3,112.50 கோடி
காங்கிரஸ்: ₹298.77 கோடி

தேர்தல் அறக்கட்டளைகளின் நன்கொடைகள்

தேர்தல் அறக்கட்டளைமொத்தம்பா.ஜ.ககாங்கிரஸ்
Prudent Electoral Trust₹2,668.46 கோடி₹2,180.71 கோடி₹21.63 கோடி
Progressive Electoral Trust₹914.97 கோடி₹757.62 கோடி₹77.34 கோடி
New Democratic Electoral Trust₹160 கோடி₹150 கோடி₹5 கோடி
Harmony Electoral Trust₹35.65 கோடி₹30.15 கோடி0
Triumph Electoral Trust₹25 கோடி₹21 கோடி0
Samaj Electoral Trust Association₹6 கோடி₹3 கோடி0
Janpragati Electoral Trust₹1.02 கோடி00
Jankalyan Electoral Trust₹19 லட்சம்₹9.50 லட்சம்₹9.50 லட்சம்
Einzigartig Electoral Trust₹7.75 லட்சம்₹7.75 லட்சம்0
மொத்தம்₹3,811.37 கோடி₹3,112.50 கோடி₹298.77 கோடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share