பாமக தலைவர் டாக்டர் அன்புமணியுடன் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேற்று (அக்டோபர் 16) சந்தித்து பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக- அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது அக்கரை இல்லத்தில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேற்று இரவு சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, பாஜக- அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என பைஜெயந்த் பாண்டா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.