கரூர் அரசு மருத்துவமனை முன்பு பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூரியா கார்களை நிறுத்திவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பல ஆம்புலன்ஸுகள் மயக்கமடைந்தவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தன.
இப்படிபட்ட நிலையில் பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா, மூன்று இன்னோவா காரில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அந்த கார்களை மருத்துவமனை நுழைவாயிலிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதனால் மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸுகளால் உள்ளே வரமுடியவில்லை. சைரனை ஒலிக்க செய்தும், ஹாரன் அடித்தும் அந்த காரை பாஜகவினர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார்களை தள்ளிக்கொண்டே சென்று ஓரம் கட்டமுயன்றனர்.
அப்போது பாஜகவினரும் வந்ததால் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் அங்கிருந்து கலைய செய்தனர்.