புதுச்சேரியில் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று மார்ச் 21ந்- தேதி அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- லஜக கூட்டணி அமைத்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள்:
- மண்ணாடிப்பட்டு – ஏ. நமச்சிவாயம்
- ஊசுடு (SC) – இ. தீப்பாய்ந்தான்
- காலாப்பட்டு – பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
- ராஜ் பவன் – வி.பி. ராமலிங்கம்
- முதலியார்பேட்டை – ஏ. ஜான்குமார்
- மணவெளி – ஏம்பலம் ஆர். செல்வம்
- திருநள்ளாறு – ஜி.என்.எஸ். ராஜசேகரன்
- நிரவி – டி.ஆர். பட்டினம் – டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்
- மாஹே – ஏ. தினேஷன்
