தமிழ்நாட்டில் இந்தி ( Bill to Ban Hindi Language) மொழியை அனைத்து வகையிலும் தடை செய்யக் கூடிய மசோதாவை சட்டமன்றத்தில் திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது முற்றிலும் வதந்தியே.
“அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை ” என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்” என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.