பீகார் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தல்: 67.14% வாக்குகள் பதிவு

Published On:

| By Mathi

Bihar 2nd Phase

பீகார் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தலில் இன்று (நவம்பர் 11) மாலை 5 மணி வரை 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளன.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் முதல் கட்டமாக நவம்பர் 6-ந் தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.08% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக 122 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பீகார் மாநிலம் முழுவதும் 45,399 வாக்குச் சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. பொதுவாக இன்றைய வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share