பிகார் தேர்தல் : பகல் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு!

Published On:

| By Kavi

பிகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கோபால்கஞ்ச் மாவட்டம் அதிகபட்சமாக 46.73% வாக்குப்பதிவை எட்டி முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து லகிசராய் (46.37%) மற்றும் பெகுசராய் (46.02%) ஆகிய மாவட்டங்களிலும் நல்ல வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. முசாபர்பூர் (45.41%) மற்றும் சஹர்சா (44.20%) ஆகிய பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதே சமயம், பிகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில் குறைந்தபட்சமாக 37.72% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற மாவட்டங்களான போஜ்பூர் (41.15%), பக்ஸர் (41.10%), தர்பங்கா (39.35%), ககாரியா (42.94%), மாதேபுரா (44.16%), முங்கேர் (41.47%), நாலந்தா (41.87%), சமஸ்திபூர் (43.03%), சாரன் (43.06%), ஷேக்ஸ்புரா (41.23%), சிவான் (41.20%), வைஷாலி (42.60%) ஆகியவையும் குறிப்பிடத்தக்க வாக்குப்பதிவைச் சந்தித்துள்ளன.

மொத்தம் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடைபெற்று வரும் இந்த முதல் கட்டத் தேர்தலில், சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் 1314 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

காலை 9 மணி நிலவரப்படி 13.13% ஆக இருந்த வாக்குப்பதிவு, 11 மணிக்கு 27.65% ஆக உயர்ந்து, தற்போது 1 மணிக்கு 42.31% ஐ எட்டியுள்ளது.

இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வரும் நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share