பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 11) நடைபெற்றது. சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி, சுமார் 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின் (64.66%) சதவிகிதத்தை விட சற்று அதிகமாகும்.
தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மீண்டும் பீகாரில் பாஜக – ஜனதா தளம் அடங்கிய என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகாபந்தன் கூட்டணி தோல்வியை தழுவும் என்று இதன் முடிவுகள் கூறுகின்றன.
| சேனல்கள் பெயர் | என்.டி.ஏ | மகாபந்தன் | மற்றவை |
| டைம்ஸ் நவ் | 142-145 | 88-91 | 1-5 |
| மெட்ரிஸ்/ஐஏஎன்எஸ் | 147-167 | 70-90 | 2-6 |
| சாணக்கியா | 130-138 | 100-108 | 3-5 |
| தைனிக் பாஸ்கர் | 145-160 | 73-91 | 5-10 |
| போல் ஸ்டார்ட் | 133-148 | 87-102 | 3-5 |
| போல் டெய்ரி | 184-209 | 32-49 | 1-5 |
| பிரஜா போல் அனலிட்டிக்ஸ் | 186 | 50 | 07 |
| டிஐஎப் ரிசர்ச் | 145-163 | 76-95 | 3-6 |
